மகிழ்ச்சி: சென்னையில் 8வது நாளாக பாதிப்பு குறைவு… இன்று 1216 பேர்…

சென்னை:

மிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1லட்சத்து 26 ஆயிரத்து 581 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு  4231 பேரில்  1216 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள்.

சென்னையில் இன்று 8வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.  இன்று 1216 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு  73,728ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இதுவரை 52,287 பேர் கொரோனா குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர்.

தற்போதைய நிலையில், 20,271  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மேலும் மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1169-ஆக உயர்ந்துள்ளது. ‘சென்னையில் இன்று பிறந்து 25 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.