சென்னை:
மிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு, திருவள்ளூர், தருமபுரி, ஈரோடு, தேனி மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 145 பேருக்கு கொரோனா  உறுதியாகி உள்ளது. இதனால்,  மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 3975ஆக உயர்ந்துள்ளது. இதுவரை  2372 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளதாகவும், தற்போதைய நிலையில், 1533 பேர் சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையு 69 ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு  மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 206 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,625 ஆக அதிகரித்தள்ளது.  இதுவரை உயிரிழப்பு92 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2665 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  2,665, குணமடைந்தோர்- 2,661 ஆக உள்ளது.

தருமபுரி மாவட்டம்:

தருமபுரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் வங்கி ஊழியர் உள்பட புதிதாக  11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில்,  மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 81ஆக உயர்ந்துள்ளது.

தருமபுரி கடைவீதி அம்பலத்தாடி தெருவில் வசிக்கும் தனியார் நிறுவன வங்கி ஊழியர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில்  திரும்பிய நிலையில் அவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து,  வங்கி ஊழியரின் மனைவி, குழந்தை மற்றும் அவரது மாமனார் ஆகியோருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் செக்குமேடு கிராமத்தைச் சார்ந்த நபர் ஆந்திராவில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். அவர் சொந்த ஊர் திரும்பியபோது, வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 11 நபர்கள் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளநிலையில், இதுவரை 81 நபர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம்
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக இன்று மேலும் 19 நபர்களுக்கு கொரோனா தொற்று  உறுதியாகி உள்ளது. ஏற்கனவே மாவட்டத்தில்  136 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், மேலும்,  19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால்,  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 157ஆக உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டம்
தேனி மாவட்டத்தில்  இன்று மேலும் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 775 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நோய்த் தொற்றில் இருந்து  150 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.