மதுரையில் கொரோனா? அரசு மருத்துவமனையில் 2 பேர் அனுமதி….

மதுரை :

துரை அரசு  மருத்துவமனையில் உடல்நலம் பாதிப்பு காரணமாக 2 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.

உலகை அச்சுறுத்தி வரும்  கொரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நலமடைந்து திரும்பி உள்ளனர். இதுவரை எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை.

இந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் 2 பேர் கொரோனா அறிகுறியுடன்  அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு தொடங்கப் பட்டு உள்ள நிலையில், தற்போது,  விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இருவர் கொரோனா அறிகுறி காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சீனா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்தில் வந்தடைந்ததாகவும், அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா அறிகுறி தென்பட்டதாகவும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவர்களுக்கு ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனையில்  எந்த தொற்று அறிகுறியும் இல்லாத நிலையில் சொந்த ஊருக்கு சென்ற நிலையில், மீண்டும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ்க்கான சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் மதுரை மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.