கொரோனா : இந்திய மருத்துவச் சிகிச்சை பெற்றோர் அனைவரும் குணம்

சென்னை

ந்திய மருத்துவ கழகத்தில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் அனைவரும் குணம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதற்கு இன்னும் தடுப்பூசி மற்றும் முறையான மருந்துகள் கண்டறியப்படவில்லை.

சென்னையில் உள்ள இந்திய மருத்துவக் கழகம் பாரம்பரிய மருத்துவ முறையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.

இந்த முறைக்கு நோயாளிகளில் சிலரை மாற்றக் கழகம் வேண்டுகோள் விடுத்தது.

கொரோனா அறிகுறிகளுடன் பாதிப்பு உறுதியான நோயாளிகளில் சிலரை அரசு அனுப்பி வைத்துள்ளது.

இவர்கள் அனைவரும் முழுமையாகக் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதையொட்டி  இந்த இந்திய மருத்துவக் கழகத்தில் படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளன.

இந்த தகவலை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி