உயர்திறன் உருப்பெருக்கி கொண்டு உருவாக்கப்பட்ட உயர் ஆற்றல் நுண்ணியப் படங்கள் மனித சுவாசப் பாதையின் மேற்பரப்பு செல்களில் தொற்றியுள்ள ஏராளமான வைரஸ் துகள்களைக் காட்டுகின்றன. இவைகள் உடல் முழுவதும் பரவி திசுக்களில் மற்றும் பிற மனிதர்களுக்கு தொற்றுநோயை பரப்பும் திறன் கொண்டவை.

ஆய்வாளர்கள் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டு, கொரோனா தொற்றுக்கு உட்படுத்தப்பட்ட சுவாசப் பாதை செல்களின் படங்களை உருவாக்கியுள்ளனர். மேலும், தோற்று ஏற்பட்டதும் ஒரு செல் எவ்வளவு புதிய சேய் வைரஸ்களை உருவாக்கலாம் என்றும் கணக்கிட்டுள்ளனர். அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக்கழகத்தின் (யு.என்.சி) குழந்தைகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் காமில் எஹ்ரே உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் இந்த படங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். SARS-CoV-2 – இன்  நோய்த்தொற்று எவ்வளவு தீவிரமானது என்பது இந்த படங்களில் இருந்து எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.

உருவாக்கப்பட்ட உயர் ஆற்றல் கொண்ட நுண்ணிய படங்கள் மனித சுவாசப் பாதையின் மேற்பரப்பில் ஏராளமான வைரஸ் துகள்களைக் காட்டுகின்றன, இந்த ஆராய்ச்சியில், விஞ்ஞானிகள் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட சுவாசப் பாதை எபிதீலியல் செல்களில்  வைரஸ் தொற்று ஏற்பட செய்தனர். பின்னர் அவர்கள் 96 மணி நேரம் கழித்து உயர் ஆற்றல் கொண்ட ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கியைப் பயன்படுத்தி ஆய்வு செய்தனர். இந்த படங்கள் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்டது.