மகாராஷ்டிரா மாநில சிறைக்கைதிகள் 1000 பேருக்கு கொரோனா தொற்று…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிறைக்கைதிகளில் பலருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகவும், சுமார் 1000 கைதிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதா சிறைத்துறை நிர்வாகம் அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. அங்கு தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில்,  அந்த மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதி களுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் கொரோனா தீவிரமாக பரவி வருவதாக  மாநில சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் இருக்கும் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு வைத்திருந்த கைதிகளில் இதுவரை 1,000 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும். சிறைச்சாலை களில் பணிபுரியும் அதிகாரிகளில் 292 பேர் உள்பட மொத்தம்  1,292 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை 6 கைதிகள் கொரோனா காரணமாக உயிரிழந்து இருப்பதாகவும் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி