மேற்கு வங்காள சுற்றுலாத்துறை அமைச்சருக்கு கொரோனா

கொல்கத்தா:
மேற்கு வங்காள சுற்றுலாத்துறை அமைச்சர் கவுதம் தேப்புக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்காள சுற்றுலாத்துறை அமைச்சர் கவுதம் தேப்புக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால், சிலிகுரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொல்கத்தா தலைமைச் செயலகத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த ஆய்வு கூட்டத்தில் கவுதம் தேப் பங்கேற்றார். சிலிகுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டார். கடந்த நாட்களில் அமைச்சர்யை சந்தித்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் ஏற்கனவே அமைச்சர்கள் 4 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மீண்டது குறிப்பிடத்தக்கது.