அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா

சென்னை:
மிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவைத் தடுக்கும் பணியில் முன்னணியில் நிற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரும் தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.