சென்னை:
மிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால்,  கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய மருத்துவ குழுவினர் இன்று 2வது நாளாக சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேரடியாக கள ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக 3வது முறையாக மத்திய சுகாதார குழுவினர் நேற்று முன்தினம் சென்னை வந்தனர். இதில் மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையில், தமிழகத்துக் கான மத்திய அரசின் கண்காணிப்பு அதிகாரி ராஜேந்திர ரத்னு, மின்னணு மருத்துவ ஆவண இயக்குனர் டாக்டர் ரவீந்திரன், மத்திய நோய் பரவல் தடுப்பு நிபுணர்கள் சுகாஸ் தந்துரு, பிரவீன், ஜிப்மர் மருத்துவர்கள் ஸ்வரூப் சாகு, சதீஷ் ஆகிய 7 பேர் இருந்தனர்.
நேற்று காலை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர் பின்னர்.

பின்னர் மாலை 4 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்து, தமிழகத்தில் நோய்த் தொற்றின் நிலை, மருத்துவ வசதிகள், கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசித்தனர்.

நேற்று  கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள  11 மாவட்ட கலெக்டர்களுடன் மத்திய குழுவினர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்கள். செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், தேனி, ராணிப்பேட்டை, ஆகிய 11 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டனர்.


நோய் பரவல், நோய் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய குழுவினரிடம் மாவட்ட கலெக்டர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.
அதைத்தொடர்ந்து இன்று  இன்று  அயனாவரம், தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளில் மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு செய்தனர்.