சென்னை:

மிழகத்தில் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில், மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்து உள்ளது.

மிழகத்தில் கொரோனா பரவல் தீவிரடைந்துள்ளதால்,  சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மதுரை உள்பட  மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தகவல்கள் பரவி வருகின்றன.

மதுரையில் இதுவரை   705 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 381 பேர் குணமடைந்த நிலையில், 316 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை  8 பேர் உயிரிழந்துள்ளனர்.

மதுவரையில் தொடர்ந்து அதிகரித்து  வரும் கொரோனா காரணமாக  238 வீதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக மாற்றப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பதிலாக 2 புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மதுரை மாவட்டத்திற்கு கண்காணிப்பு அதிகாரியாக சந்திரமோகன் ஐஏஎஸ்-ம்,  ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்காணிப்பு அதிகாரியாக தர்மேந்திர பிரதாப் யாதவ் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.