புதுச்சேரியில் தீவிரமடைந்து வரும் கொரோனா: இன்று 543 பேர் பாதிப்பு…

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும்  543 பேருக்கு கொரோனா  உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,456 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. தற்போது கொரோனாவின் 2வது அலை பரவி வருவதாக கூறப்படுகிறது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் பாதிப்பும் உயர்ந்து வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 53 லட்சத்தை கடந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 93,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,247 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,456 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையை தீவிரமாக்க மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.