தேனி:
தேனி மாவட்டத்திற்குட்பட்ட ஆண்டிபட்டியில்  இன்று முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக இந்த ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடைமுறைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
கொரோனா பரவல் சென்னையில் தீவிரமாக உள்ள நிலையில், தற்போது மாநிலத்தில் உள்ள 37 மாவட்டங்களிலும் பரவி உள்ளது. தேனி மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது.
தேனி மாவட்டத்தில் நேற்று (ஜூலை 6ந்தேதி மாலைநிலவரம்)  ஒரே நாளில் மட்டும் 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதித்தோர் எண்ணிக்கை 1,128 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தாசில்தார் சந்திரசேகரன் தலைமையில் நடந்த அதிகாரிகள் கூட்டம் இன்று நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, இன்று (ஜூலை 7) முதல் (ஜூலை 17) வரை 10 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.