சென்னையை சீரழிக்கும் கொரோனா… 2வது நாளாக 2ஆயிரத்தை கடந்த பாதிப்பு

சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று உச்சமடைந்து வருகிறது.  மாநிலத் தலைவர் சென்னையில் இன்று 2வது நாளாக 2ஆயிரத்தை கடந்த பாதிப்பு அதிகரித்துள்ளது. இது மக்களிடையே பதற்றத்தை உருவாக்கி வருகிறது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத விதமாக  இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிப்புக்குள்ளான 3949 பேரில் 2167 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் இதன் காரணமாக சென்னையில் மட்டும் கொரோனா  வைரஸ் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  55,969 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 33,441 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மேலும்,  21,681 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. சென்னையில் இதுவரை கொரோனாவுக்கு 846  பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டம் வாரியாக விவரம்: