சென்னை:
மிழகத்தில் தீவிரமடைந்து வரும் தொற்று பரவல் இதுவரை சென்னையை சூறையாடி வந்த நிலையில், தற்போது பல்வேறு  மாவட்டங்களில் தனது தாக்குதலை தொடங்கி உள்ளது.
சென்னைக்கு அருகே உள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 239 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட் டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 181  ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலையில், 3,091பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதுவரை  3954 பேர் குணமடைந்துள்ளனர்
திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று  ஒரே நாளில் 271 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,476 ஆக அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருந்தொற்று பாதிப்பு 2,730 ஆக இருந்து வருகிறது.  நேற்று 106 பேருக்கு தொற்று ஏற்பட்டது. எனவே இங்கு பாதிப்பு எண்ணிக்கை 2,836 ஆக உயர்ந்தது. இவர்களில் 1,137 பேர் குணமடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம்
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால்  மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,325 ஆக அதிகரித்துள்ளது.
மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது. இன்று ஒரே நாளில் மேலும் 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  தற்போதைய நிலையில், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,821 ஆக உயர்ந்துள்ள நிலையில், 1,111 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  இதுவரை அங்கு  77 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கெனவே 2,633 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 99 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 2,688 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நோய்த் தொற்றிலிருந்து  1,304 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் இன்று மேலும் 28 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  166ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 69பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 54 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  ஒருவர் பலியாகி உள்ளார்.