சென்னை

டசென்னையில் உள்ள பல பகுதிகளில் கொரோனா தொற்று இல்லை எனச் சென்னை  மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்று குறித்து நேற்று மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.  அதில் சென்னையில் கொரோனா தொற்று உள்ள இடங்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.  அதன்படி அண்ணாநகர் பகுதிகளில் 5 பேர், கோடம்பாக்கம் பகுதியில் 5 பேர், வளசரவாக்கம் பகுதியில் 2 பேர் மற்றும் சாந்தோம், ஆலந்தூர், கோட்டூர்புரத்தில் தலா ஒருவர பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் வடசென்னையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனதெரிய வந்துள்ளது  அதாவது திருவொற்றியூர், மணலி, ராயபுரம், தண்டையார்பேட்டை, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் இங்குள்ள மக்கள் கடலோரம் உள்ளதால் உப்புக்காற்றை சுவாசிப்பதால் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்கள் எனக் கூறப்படுகிறது. அத்துடன் இங்கு பலரும் சென்னையில் பணி புரிவதால் வெளிநாட்டில் இருந்து வருவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளதும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

வடசென்னை மக்கள் என்றால் மற்ற பகுதி மக்களுக்குச் சற்று அச்சமுள்ளதாகக் கூறப்படும் நிலையில் கொரோனாவுக்கும் வடசென்னை மக்களிடம் அச்சம்  உள்ளதாகக் கேலியாகப் பலர் தெரிவித்துள்ளனர்.