தமிழகத்தில் கொரோனா இரட்டிப்பாகி வருகிறது… மத்திய சுகாதாரத் துறை தகவல்

சென்னை:
மிழகத்தில் 14 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா வைரஸின் தாக்கம் இரட்டிப்பு ஆகிவருகிறது  மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்து உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் முதல்கட்டமாக மார்ச் 24ந்தேதி முதல் ஏப்ரல் 14ந்தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், அதுவரை அமைதியாக இருந்த கொரோனா வைரஸ், ஊரடங்கு விலக்கப்படும் என எதிர்பார்த்த சில நாட்களுக்கு முன்பு அதன் தாக்கத்தை தீவிரப்படுத்தியது.
இதனால் தமிழகம் உள்பட  பல மாநிலங்களில் கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இதனால் ஊரடங்கை நீட்டிக்க பல மாநிலங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தன. அதன்படி, பிரதமர் மோடி ஊரடங்கை மே 3ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். அத்துடன், கொரோனா தாக்கம் இல்லாத மாவட்டங்களில் 20ந்தேதிக்கு பிறகு ஊரடங்கில் சில கட்டப்பாடுகள் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி சில மாநிலங்கள்  ஊரடங்கில் இருந்து சில  தொழில்களுக்கு விலக்கு அளித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஊரடங்கில் தளர்வு இல்லை என்று தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாகவும், 14 நாட்களுக்கு ஒருமுறை , அது இரட்டிப்பாகி வருவதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.