கொரோனா பேரிடர் – துணை ஜனாதிபதியின் சிந்தனை என்ன தெரியுமா?

--

புதுடெல்லி: தற்போதைய கொரோனா பரவல் என்பது ஒரு பேரிடர் மட்டுமல்ல, நமது சமூகத்திற்கான ஒரு திருத்துனர் என்றுள்ளார் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு.

அடுத்த சவாலை சந்திப்பதற்காக, நமது வாழ்க்கையை மறுநோக்கம் செய்து கொள்ளும் வகையில் இது நம்மை தயார் செய்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். தனது முகநூல் பதிவில் அவர் இதை தெரிவித்துள்ளார்.

“கடந்த சில மாதங்களாக ஊரடங்கில் முடக்கப்பட்டு இருந்ததன் வாயிலாக, எதிர்காலங்களில் வரக்கூடிய சவால்களை சந்திப்பதற்கு நம்மை தயார்செய்து கொண்டுள்ளோமா? என்பது குறித்து மக்கள் தங்களுக்குள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

வாழ்க்கையின் போக்கில் நிகழும் ஒவ்வொரு பேரிடரும், எதிர்காலத்திற்கு நம்மை தாயர்செய்து கொள்வதற்கான முன்தேவை சிந்தனைகளை அளிக்கின்றன. அத்தகைய ஒரு பாடத்தை அளிக்கும் பேரிடரில்தான் இப்போது நாம் சிக்கியுள்ளோம்.

இந்த உலகம் நமக்குத் தேவையாய் இருக்கையில், இந்த உலகத்திற்கு நாம் தேவையாக இருப்பதில்லை” என்றுள்ளார் அவர்.