சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல கொரோனா தடையாக உள்ளது.. .நிர்மலா சீதாராமன் புலம்பல்

டெல்லி:

பாரதிய ஜனதா கட்சியின் சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல கொரோனா பெரும் தடையாக இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார்.

மத்திய அரசின் சாதனை குறித்து தமிழக பாஜகவினருடன் காணொலி மூலம் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

“மத்திய பா.ஜ.க. அரசின் சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல கொரோனா தடையாக இருக்கிறது. அரசின் சாதனைகளைக் கிராம மக்களிடம் டிஜிட்டல் முறையில் கொண்டு செல்லும் அளவுக்கு முன்னேறியுள்ளோம்.

தேர்தல் பரப்புரையில் பா.ஜ.க. அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. பதவி ஆசை காரணமாக அவசர நிலையை அமல்படுத்திய காங்கிரஸ் கட்சி, ஜனநாயகத்தைப் பற்றி பேசுவது வேதனை அளிக்கிறது என்றார்.

மேலும், தி.மு.க.-வின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை டிஸ்மிஸ் செய்தது காங்கிரஸ் கட்சி. தி.மு.க. தலைவர்கள் மீது அடக்குமுறையை ஏவிய காங்கிரஸ் கட்சிக்கு இன்று தி.மு.க. ஆதரவு அளிப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

இவ்வாறு பேசினார்.