லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது.  அதுபோல பலி எண்ணிக்கையும் 95 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் நேற்று ஒரேநாளில் மட்டும் 1700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் இருந்து பரவி உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரசின் ஆட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. தினசரி ஆயிரக்கணக்கானோரை பலிவாங்கி வரும் இந்த உயிரிக்கொல்லி வைரசை தடுக்க உலக நாடுகள் பகிரத பிரயத்தனம் செய்து வருகின்றன. உலக வல்லரசு நாடுகளின் கண்களிலும் விரலைவிட்டு ஆட்டிக்கொண்டு வருகிறது.

இந்த கொடூர வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இந்தியா உள்பட பல நாடுகள், தனிமைப்படுத்துதலை தீவிரப்படுத்தி வருகின்றன. அனைத்து வகையான போக்குவரத்துகள் உள்பட கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களும் முடக்கப்பட்டு உள்ளன.

இன்று காலை நிலவரப்படி  உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை    95,765 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை   1,605,692ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியவர்கள்  356,969 பேர் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.

‘அமெரிக்காவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா, தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை சாகடித்து வருகிறது.   சுமார் 4 லட்சத்து 68 ஆயிரத்து 566  ஆக உயர்ந்துள்ளது.  உயிரிழப்பு 17 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. நேற்று ஒரே நாளில் 1700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசுக்கு குணமடைந்தோர் எண்ணிக்கை  25,928 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து ஸ்பெயின்  நாடும் கடுமையாக பாதிக்கப்ப்டடு உள்ளது. அங்க கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை   15,447 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை  52,165 பேர் . கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை  153,222 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் மட்டும் 655 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ஜெர்மனியில் பாதிப்புகள் குறையத் தொடங்கியுள்ள நிலையில், உயிரிழப்புகள் கட்டுக்குள்ளேயே உள்ளது.

பிரான்சில் தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. 12 ஆயிரத்து 210 பேர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அங்கு ஒரே நாளில் 1,341 பேர் உயிரிழந்துள்ளனர்.