சென்னையில் இன்று மேலும் 23 பேர் கொரோனாவுக்கு பலி…

--

சென்னை:

சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில், இன்று மேலும் 23 பேர் பலியாகி உள்ளது தெரிய வந்துள்ளது.

சென்னையில் நேற்று மாலை (18ந்தேதி)  6 மணி நிலவரப்படி கொரோனாவல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,070 ஆக உயர்ந்துள்ளது.  16,882பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,19,686 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியதாகவும். இதுவரை 501 பேர் உயிரிழந்து இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சென்னை ஆயிரம்விளக்கு தனியார் மருத்துவமனையில் ஒரு பெண் உள்பட 3 பேரும், சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் 3 முதியவர்கள் உள்பட 5 பேர் மற்றும்,   ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 7 பேர், கீழ்ப்பாக்கம்  அரசு மருத்துவமனையில் 3 பேர், ஸ்டான்லி அரசு  மருத்துவமனையில் 4 பேர் பலி உள்பட இன்று மேலும் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

You may have missed