வாஷிங்டன்

நேற்று 84,811 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை,, 12,01,473 ஆகி உள்ளது.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 84811 அதிகரித்து மொத்தம் 12,01,473 ஆகி உள்ளது  நேற்று 5517 பேர் மரணம் அடைந்து மொத்தம் 64,691 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 2,46,383 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 42,288 பேர் அபாய நிலையில் உள்ளனர்.

அதிக அளவில் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் நேற்று 34,196 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 3,11,357 ஆகி உள்ளது நேற்று மட்டும் 1048 பேர் மரணம் அடைந்து மரணமடைந்தோர் எண்ணிக்கை 8452 ஆகி உள்ளது.  இங்கு 14741 பேர் குணம் அடைந்துள்ளனர்.  8206 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஸ்பெயின் நாட்டில் நேற்று 6969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மொத்த எண்ணிக்கை 1,26,168 ஆகி உள்ளது.  இது உலக அளவில் இரண்டாம் இடமாகும்.  நேற்று 749 பேர் மரணம் அடைந்துள்ளனர். மொத்த மரண எண்ணிக்கை 11,947 ஆகி உள்ளது.  இங்கு 34219 பேர் குணம் அடைந்துள்ளனர்.  6532 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இத்தாலி நாட்டில் நேற்று 4805 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மொத்த எண்ணிக்கை 1,24,632 ஆகி உள்ளது.  இது உலக அளவில் மூன்றாம் இடமாகும்.  நேற்று 681 பேர் மரணம் அடைந்துள்ளனர். மொத்த மரண எண்ணிக்கை 15,362 ஆகி உள்ளது. இது உலக அளவில் முதல் இடமாகும்.  இங்கு 20996 பேர் குணம் அடைந்துள்ளனர்.  3994 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

நேற்று பிரான்ஸ் நாட்டில் 1053 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இது நேற்று அதிக அளவில் கொரோனா மரணம் நிகழ்ந்த நாடாகும்.  இங்கு நேற்று 7788 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.  இது உலக அளவில் இரண்டாம் இடமாகும்.

கொரோனாவின் ஊற்றுக் கண்ணான சீனாவில் நேற்று 30 புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,669 ஆகி உள்ளது.  நேற்று 3 பேர் மரணம் அடைந்ததால் மொத்தம் மரணமடைந்தோர் எண்ணிக்கை 3329 ஆகி உள்ளது.

இந்தியாவில் நேற்று 529 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மொத்த எண்ணிக்கை 3588 ஆகி உள்ளது.  நேற்று 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். மொத்த மரண எண்ணிக்கை 99 ஆகி உள்ளது. இது வரை  229 பேர் குணம் அடைந்துள்ளனர்.