கொரோனா : இன்றைய (01-04-2020) காலை நிலவரம்…

வாஷிங்டன்

கொரோனா தாக்குதலால் நேற்று மட்டும் 4341 பேர் பலியாகி மொத்தம் 42,114 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் தொடங்கி தற்போது 201 உலக நாடுகளில் பரவி உள்ளது.  நேற்று மட்டும் உலக அளவில் 72,561 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு மொத்தம் 8,57,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  4341 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று வரை 1,77,141 பேர் குணம் அடைந்துள்ளனர்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் 6,38,044 பேர் உள்ளனர்.

நேற்று அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 23,941 ஆகும்.  இங்கு இதுவரை 1,87,729 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  இவர்களில் 6461 பேர் குணம் அடைந்துள்ளனர்.  நேற்று 726 பேர் மரணம் அடைந்து மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 3867 ஆகி உள்ளது.

அடுத்ததாக இத்தாலியின் மொத்தம் பாதிக்கப்பட்டோர் 1,05,792 பேர் உள்ளனர். இங்கு நேற்று மட்டும் மரணமடைதோர் எண்ணிக்கை 837 ஆகி மொத்தம் 12,428 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  உலக அளவில் இது மிகவும் அதிகம் ஆகும்.  நேற்று 4053 புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயின் நாட்டில் நேற்று 7967 புதிய நோயாளிகளுடன் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 95,923 ஐ அடைந்துள்ளது.   இங்கு 748 பேர் மரணம் அடைந்து மொத்தம் 8464 பேர் உயிர் இழந்துள்ளனர்.

அடுத்ததாக சீனா, ஜெர்மனி, ஃப்ரான்ஸ், போன்ற நாடுகள் வருகின்றன.

இந்தியாவில் நேற்று 146 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு மொத்தம் 1617 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று 3 பேர் உயிரிழந்ததால் மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 35 ஆகி உள்ளது.