சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம்பெற்றுள்ள நிலையில், லாக்டவுன் காரணமாக, சென்னையில் 205 மின்சார ரயில் சேவை குறைக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   சென்னையில்  மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் இயக்கப்பட்டு வரும், 85 மின்சார ரெயில் சேவையும், மூர்மார்க்கெட், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 30 சேவையும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 24 ரெயில் சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 66 ரெயில் சேவையும் என 205 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.