மும்பை:

கொரோனா தொற்றை தடுக்கும் வகையில், தனது முழு ஊதியத்தையும் வழங்குவதாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளம் எம்எல்ஏ சீஷான் சித்திக் அறிவித்து உள்ளார். அந்த பணத்தில் தொகுதி மக்களுக்கு தேவையான மாஸ்க் மற்றும் சானிடைசர் போன்ற பொருங்கள் வாங்கி வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிக அளவிலான பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதுவரை 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாநிலத்தின் இளைஞர் காங்கிரஸ் கட்சி தலைவராகவும், பந்ததா தொகுதி  காங்கிரஸ் எம்எல்ஏவுவான சீஷான் சித்திக் என்பவர், கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையில், தனது, எம்எல்ஏ மாத சம்பளத்தை முழுவதுமாக வழங்குவதாக தெரிவித்து உள்ளார்.

இந்த பணத்தின் மூல மக்களுக்கு 30ஆயிரம் முகமூடிகள் (மாஸ்க்) மற்றும் 3 ஆயிரம் சானிடைசர்கள் வாங்கி, வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளார். வரும் சனிக்கிழமை அன்று, மாஸ்க் மற்றும் சானிடைசர்கள் தனது தொகுதி மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் குறிப்பிபட்டு உள்ளார்..