மும்பை

காராஷ்டிர மாநிலத்தில் கொரோனா அச்சுறுத்தலால் 11000 கைதிகள் பரோலில் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது.  இதைக் கட்டுப்படுத்த அம்மாநில அர்சு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  கூட்டமாக உள்ள சிறைகளில் கூட்டம் குறைக்கப்படுகிறது.

இதையொட்டி மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

அதில் அனில் தேஷ்முக், “மகாராஷ்டிராவில் 45 சிறைகள் உள்ளன.  அவற்றில் 60000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.  அதிகம் மக்கள் உள்ள இடங்களில் கொரோனா வேகமாகப் பரவும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  சிறைகளில் கைதிகள் அவ்வாறு தான் உள்ளனர்.

எனவே விசாரணைக் கைதிகள் மற்றும் 7 வருடம் வரை தண்டனை பெற்றவர்கள் ஆகியோரை பரோலில் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு சுமார் 11000 கைதிகள் அவசர பரோலில் 45 நாட்களுக்கு விடுதலை செய்யப்பட உள்ளனர்.

அவர்கள் அனைவரும் விடுதலைக்கு முன்னர் மருத்துவ சோதனை செய்யப்பட்டு முறையான அனுமதியுடன் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பப்படுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.