சென்னை:

சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கொடுங்கையூர் டீஸ்சர்ஸ் காலனியில் சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா மருத்துவ முகாம்  நடைபெற்றது.

சென்னையின் 4வது மண்டலமான தண்டடையார் பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. இந்த மண்டலத்தில் இதுவரை நோய் தொற்றால் 1990 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4291 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 112 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, ஆங்காங்கே சென்னை மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில், டீச்சர்ஸ் காலனி  குடியிருப்பாளர் சங்கம் மற்றும், டீச்சர்ஸ் காலனி கங்கையம்மன் கோவில் நிர்வாகிகளின்  முயற்சியில், டீச்சர்ஸ்காலனியில் இன்று மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு, பரிசோதனை மேற்கொண்டனர். அனைவருக்கும், ஸ்கிரினிங் டெஸ்ட்  மற்றும் துடிப்பு ஆக்சி மீட்டர் கொண்டும் சோதனை செய்யப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.  அனைவருக்கும் கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஏற்கனவே குடியிருப்போர் சங்க முயற்சியில் பல முறை கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தினசரி வீடு தோறும்  குப்பைக்கூளங்கள் சேராமல், அகற்றப்பட்டும், கடந்த சில நாட்களாக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வீடுதோறும் தெர்மல் டெம்ப்ரேச்சர்  சோதனையும் மாநகராட்சி களப்பணியாளர்களால் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள்  சார்பாக  மருத்துவ முகாம் நடத்த வலியுறுத்தப்பட்டு வந்த  நிலையில், இன்று திடீரென மருத்துவ முகாம் நடத்தப்பட்டதால், பொதுமக்கள் பலருக்கு, முகாம் குறித்த அறிவிப்பின்றி, பெரும்பாலோனோர் சோதனைக்கு வர முடியாத சூழலும் ஏற்பட்டது.

இதனால் முகாம்  காலை 10  மணிக்கு தொடங்கி 12 மணிக்கு முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனவே, சென்னை மாநகராட்சி சார்பில் இதுபோன்ற மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்போது, முன்கூட்டியே,  மருத்துவ முகாம் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்து  சரியான  அறிவிப்பு வெளியிட்டால், அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் காலை 10 மணி முதல் குறைந்த பட்சம் மதியம் 2 மணி வரையாவது சோதனை நடத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இல்லையேல், மாநகராட்சியின் கொரோனா தடுப்பு நடவடிக்கை கேள்விக்குறியதாகவும், கேலிக்குறியதாகவே மாறிவிடும்.  கடமைக்கு சோதனை நடத்தப்படுவது போன்ற மாயையை மக்களிடையே தோற்றுவித்துவிடும்.

இனிமேலாவது மாநகராட்சி அதிகாரிகள் சிந்தித்து செயல்படுவார்களா…