மகாராஷ்டிராவுக்கு  செல்ல கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம்

மும்பை

காராஷ்டிர மாநிலத்துக்கு 6 மாநிலங்களில் இருந்து செல்வோருக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிர மாநிலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் முன்னணியில் உள்ளது.  இங்கு இதுவரை 38,39,358 பேர் பாதிக்கப்பட்டு 60,473 பேர் உயிர் இழந்துள்ளனர்.   நேற்று வரை 31,06,828 பேர் குணம் அடைந்து 6,70,328 பேர் சிகிச்சையில் உள்ளனர்.   இதையொட்டி இங்குக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிர மாநிலம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் கேரளா, கோவா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இம் மாநிலங்களில் இருந்து மகாராஷ்டிர மாநிலத்திற்கு ரயில்களில் வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த 6 மாநிலங்களில் இருந்து வருவோர், பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.  சோதனையில் கொரோனா தொற்று இல்லையென முடிவு வந்ததற்கான சான்றிதழ் அளித்தால் மட்டுமே மகாராஷ்டிராவிற்குள் அனுமதிக்கப்படுவர்.  அதுமட்டுமின்றி முன்பதிவு செய்யாமல், வருவோருக்கும் மகாராஷ்டிராவில் அனுமதி இல்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.