இ. கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு கொரோனா இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: மருத்துவமனையில் உள்ள இ. கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு திடீரென காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் கூறுகையில், அவருக்கு சாதாரண காய்ச்சல், எனவே அச்சம் கொள்ளத் தேவையில்லை என கூறினார்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நல்லகண்ணுவிற்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த சோதனையில் நல்ல கண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை என்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில், நல்லகண்ணு தற்போது நலமுடன் உள்ளார், 5 நாட்கள் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்புவார் என்று தெரிவித்துள்ளார்.