கொரோனாவா? பராமரிப்பா?ஹுண்டாய் தொழிற்சாலை 5 நாள்கள் மூடுவதாக அறிவிப்பு

பூந்தமல்லி:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹூண்டான் கார் தொழிற்சாலை 5 நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பரபரபரைப ஏற்படுத்தி உள்ளது. ஆனால், பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக ஆலையை மூடுவதாக  ஹுண்டாய் தொழிற்சாலை  நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சென்னையை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் நோய் தொற்று தீவிரமடைந்து உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 32 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 709 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில்,  காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில், காா்களை உற்பத்தி செய்யும் ஹுண்டாய் தொழிற்சாலை  இன்று (திங்கள்கிழமை)  முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை தொழிற்சாலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஹுண்டாய் நிறுவனம்,   தொழிற்சாலையில் உள்ள நூற்றுக்கணக்கான ரோபோக்கள், இயந்திரங்கள் ஆகியவை மேம்படுத்தப்பட்டு, அதிக செயல்திறன் உள்ள புதிய தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டு புதிய ரக காா்களை உற்பத்தி செய்யும் வகையில் மாற்றியமைக்கப்பட உள்ளது. அதன் காரணமாகவே 5 நாட்கள் ஆலை மூடப்படுவதாகவும், இது ஆண்டு தோறும் நடைபெறும் வழக்கமான நடைமுைான் என்று தெரிவித்துள்ளது.

ஆனால், தொழிலாளர்களோ,  கொரோனா காரணமாகவே ஆலை மூடப்படுவதாகவும், முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு , சுத்தப்படுத்தும் பணிகளுக்காகவே ஆலை மூப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.