பணியும் பணி சூழலும்

கடந்த பத்து ஆண்டுகாலமாகவே நாம் நமது பணியில், பணி  சூழலில் ஏற்பட்டு கொண்டிருக்கும் மாற்றங்களை கண்டுவருகிறோம். வேறு எந்த ஒரு காரணத்தையும்விட, தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் சமூக மாற்றங்கள் பணியையும், பணி சூழலின் எதிர்காலத்தை மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது. முன்னோக்கு பார்வையுடன் சிந்திக்கவல்ல தலைவர்கள், தங்கள் நிறுவனங்களில் ஏற்படவிருக்கும் இந்தமாற்றத்தின் விளைவுகளைப் பற்றி யோசிக்கிறார்கள் என்றாலும், அனைவரும் எதிர்பார்க்கும் இந்த மாற்றம் நகைமுரணாக மெதுவான ஒன்றாகவே உள்ளது. அதாவது இப்போது வரை!!!!

எதிர்காலத்தில் வேலை செய்ய மறு வடிவமைக்கப்பட்ட பணியிடங்கள், மறு வரையறை செய்யப்பட்ட பொறுப்புகள், விரைவான கற்றல் மற்றும் அதிக நம்பிக்கை தேவைப்பட்டால், அதை நிறுவனங்கள் செய்துக் கொடுக்க முடியுமானால், கொரோனா வைரஸ் தொற்று நோய் நிவர்த்திகளுக்கு இடையே இந்நிறுவனங்கள் எதிர் வரும் மாற்றங்களுக்கு சவால் விடலாம். VUCA (Volatile – கொந்தளிப்பான, Uncertain – நிச்சயமற்ற, Complex – சிக்கலான மற்றும் Ambiguous – தெளிவற்ற) சூழல்கள் என்ற ஒரு சூழ்நிலை என்பது பற்றி பலரும் பேச நாம் கேட்டிருக்கலாம். தற்போது அதுபோன்றதொரு சூழ்நிலையை சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்கொள்கிறோம். கடந்த சில வாரங்களில், உலகின் பொருளாதாரம் ஒரு எச்சரிக்கைக்கு உள்ளாக்கப்பட  வேண்டிய திசையை நோக்கிப் பயணித்துக் கொண்டுள்ளது. அது முன்னெச்சரிக்கை யூகங்களில் இருந்து பெரும் திரளாக வணிகங்களை முடக்குதல், வீட்டில் இருந்து வேலை செய்தல் என அவசியமான, அபாயகரமான நிலையை நோக்கி திரும்பியுள்ளது. ஜேபி மோர்கன், ஏடி & டி, கூகிள், அமேசான், நைக், பேஸ்புக் பலவற்றில், மெய்க்கு நிகரான (Virtual) வணிக நடவடிக்கைகளை முயன்று வருகின்றனர். ஏனெனில் “சமூக விலகல்” மட்டுமே தற்போது தொற்றுநோய்களின் “வரைபட வளைவைத் தட்டையாக்கும்” ஒரு சிறந்த நடைமுறையாகத் திகழ்கிறது.

தற்போதை வணிக நடைமுறைகளின் மாற்றத்திற்கு கொரோனா வைரஸ் ஒரு சிறந்த ஊக்கியாக உள்ளது. உண்மையில், பல ஆண்டுகளேனும் ஆகும் என கணிக்கப்பட்டிருந்த, நம்மால் எதிர்ப்பார்க்கப்பட்ட  மாற்றங்கள் பலவும், கொரோனா வைரஸை ஊக்கியாகவும், காரணமாகவும் கொண்டு அடுத்த சில மாதங்களுக்குள் ஏற்படபோகிறது என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கை கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆரம்ப நாட்களிலேயே,  அலுவலக வேலை, வேலை கற்றல் மற்றும் அன்றாட வாழ்க்கையை பாதிக்கக் கூடியதும், அதே சமயம் இனி வரும் காலங்களில் நமது அன்றாட வாழ்க்கையாக மாறக்கூடியதுமான மாற்றங்கள், நான்கு அடிப்படை மாற்றங்களின் பின்னணியில் நடந்துக் கொண்டிருப்பதை காண்கிறோம்:
·        வணிகம், மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தன் நோக்கத்தை தகவமைத்துக் கொள்கிறது.
·        கலாச்சாரம் என்பது நிறுவனங்களின் முதுகெலும்பாகிறது.
·        வேலை மற்றும் தலைமை மக்களுக்கு ஏற்றவாறு மறுசீரமைப்பு செய்யப்படுகிறது
·        இந்த நூற்றாண்டின் மூன்றாவது ஒழுக்க சோதனையில் வெற்றி பெற “ஒற்றுமையான மனிதநேயம்” காரணமாக இருக்கபோகிறது.
மக்களின் தேவையும், வணிகத்தின் நோக்கமும்

ஆகஸ்ட் 2019 இல், அமெரிக்காவின் மிகப்பெரிய வணிக நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் கலந்துக் கொண்ட வட்டமேஜை மாநாட்டில் ஒரு மிகப்பெரிய முடிவு ஒன்று அறிவிக்கப்பட்டது. அது தொழிலாளர்கள், நிறுவனம் சார்ந்த பல்வேறு சமூகங்கள், பங்குதாரர்களும் அதன் முதலீட்டாளர்கள் மற்றும் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்களைப் போலவே மதிப்புமிக்கவர்கள் என்பதை ஒப்புக் கொண்டது. வணிக உலகில் அது ஒரு அதிர்ச்சியூட்டும் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், இந்த அறிவிப்பு, நியூயார்க் டைம்ஸ் இதழில் 1970 ஆம் ஆண்டு மில்டன் ப்ரீட்மேனின் (Milton Friedman) வழிக்காட்டுதல்களாக வெளிவந்து, பன்னெடுங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த “வணிகத்தின் ஒரே நோக்கம் பங்குதாரர்களுக்கு லாபத்தை ஈட்டுவதாகும்” என்ற சித்தாந்தத்தை ஒட்டுமொத்தமாக பின்தள்ளுவதாக இருந்தது. ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த வட்டமேஜையில் “நாங்கள் எங்கள் ஊழியர்களின் மீது, அவர்களுக்காக முதலீடு செய்ய கடமைப்பட்டுள்ளோம். இது அவர்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான ஈடு. அந்த ஈடு அவர்களுக்கு உரிய அனைத்து பலன்களையும், பங்குகளையும் வழங்குவதன் மூலம் தொடங்குகிறது. இது விரைவாக மாறிவரும் உலகத்திற்கேற்ப புதிய திறன்களை வளர்க்க உதவும் பயிற்சிகள் மற்றும் உரிய கல்வி மூலம் அவர்களுக்கு துணை நிற்பதும் இதில் அடங்கும். நாங்கள் எங்கள் பணியாளர்களிடம் பன்முகத்தன்மை கொண்ட உள்ளடக்கம், கண்ணியம், மரியாதை ஆகியவற்றை வளர்க்க முயற்சிக்கிறோம்” என்றும் அறிவிக்கப்பட்டது.

எச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கை மற்றும் வெறுப்பு மனப்பான்மையுடன் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த அறிக்கை ஒரு கட்டாயமாக திணிக்கப்பட்ட அறிக்கையாகவே பலராலும் பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய கொரோனா வைரஸ் அபாயம் இந்த தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு அவர்கள் சொன்னதை நிரூபிக்க மிகச் சரியான வாய்ப்பளித்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வணிகம் மற்றும் பொருளாதார சீர்குலைவுக்கு மத்தியில், வளர்ந்து வரும் மூடப்படும் வணிகங்கள் பலவும் தங்கள் ஊழியர்களுக்கு அவர்களின் வணிக நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் போதும் அவர்களுக்கு ஊதியம் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க, உள்ளூர் உள்ளூர் நிறுவனங்களின் உதவியுடன் கற்பிக்கின்றன.

கட்டாய மற்றும் தன்னார்வ ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு உணவகங்கள் மற்றும் காபி கடைகளை மனதில் வைத்து, பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் இந்த உணவகங்களில் செய்யும் உணவு மற்றும் காபி செலவுகளை திருப்பி அளிக்க முடிவெடுத்துள்ளன. ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய உதவும் வகையில் தொழில்நுட்பம் மற்றும் பயிற்சிகளை வழங்கி பாதுகாப்பதை நாம் காண்கிறோம். மேலும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, வணிக நடைமுறைகள், ஊழியர்கள் செயல்படும் முறைகள் மற்றும் பணிநேரம் போன்றவற்றில் மாற்றங்களை மேற்கொள்வதை காண்கிறோம். ஃபோர்ப்ஸ் மூத்த பங்களிப்பாளர் ஷாமா ஹைடர் இந்த முயற்சி காலங்களில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தைரியமான முன்முயற்சிகளுடன் வளர்ந்து வரும் நிறுவனங்களின் பட்டியலை சேகரித்து வைத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை 21, மார்ச் மாலை, “கில்ட் எஜுகேஷனி”ன் தலைமை நிர்வாக அதிகாரி ரேச்சல் ரோமர் கார்ல்சன் மற்றும் கூட்டு நிறுவனமான “ஜெனரல் கேடலிஸ்ட்”டின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கென் செனால்ட், ஊடகங்களில் ஒரு தைரியமான கார்ப்பரேட் தலைமையை  வேண்டி ஒரு அழைப்புக் கடிதத்தை வெளியிட்டனர். இப்போது 1,500 கார்ப்பரேட் தலைமை நிர்வாக அதிகாரிகளால் கையொப்பமிடப்பட்ட அந்தக் கடிதம், கார்ப்பரேட் தலைவர்களை அவர்களது ஊழியர்களிடையே வீட்டில் இருந்து பணிபுரிதலை ஊக்கப்படுத்தி, ஓரிடத்தில் கூடுதலை தவிர்க்கும் கொள்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸை பரவலை கட்டுப்படுத்தல் (#stopthespread) – க்கு இணங்கியுள்ளது. தற்போது இந்த முயற்சி பெரும் பொருளாதாரத்தில் வலுவாக உள்ள பெருநிறுவனங்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு, 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டிய தொகைகளை உடனடியாக செலுத்த ஊக்குவிப்பதற்காக (#payitforward) முயற்சியாக  விரிவடைந்துள்ளது. மேலும் கடை நிலை ஊழியர்களின் கல்வி சார்ந்த திட்டங்களை ஒக்குவிப்பதன் மூலம் அவர்களையும், அவர்களது உரிமைகளைத் அறிந்து, தற்காத்துக் கொள்ள ஊக்குவித்தல், சமூகம் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்தல், குறிப்பாக குழந்தைகளின் பசி தீர்க்கும் திட்டங்கள் மூலம் பள்ளிகளில் மதிய உணவைப் பெறாத குழந்தைகளுக்கு உதவுதல் என பரிமாணம் அடைந்து வருகிறது.

அந்த வட்டமேஜை சந்திப்பில் கலந்துக் கொண்ட நிறுவனங்கள், கொரோனா வைரஸ் பரவலின் பரிமாணத்தை பற்றிய ஒரு சோதனையை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்று என்று கற்பனை கூட செய்து பார்த்திருக்க முடியாது. ஆனாலும் தங்களின் சமீபத்திய திருத்தப்பட்ட அறிக்கையின்படி செயல்பட்டு வருவதற்கு நாம் அவர்களை பாராட்ட வேண்டும்.

கலாச்சாரம் – பெருநிறுவனங்களின் முதுகெலும்பு

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வளர்ந்து வரும் மாற்றங்களை கருத்தில் கொண்டு ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது. அதன்படி, தற்போதைய மாற்றங்கள் நிறைந்த வணிக உலகில், கலாச்சாரம் மற்றும் புதுமைகளை கண்டறிதல், உருவாக்குதல் மற்றும் தகவமைத்துக் கொள்ளல் என்பதே ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சாரம்சமாக இருக்க முடியும் என்பதே ஆகும். எங்கள் வாடிக்கையாளர்களில் பலரின் கவனம் தவறாக திசைதிருப்பப்படும் நிலையை கவனித்து அவதானித்த பின்னரே இந்த யோசனை உதித்தது. எங்கள் வாடிக்கையாளர்கள் பலரும் பிராண்ட், அதன் பிரபலம்,   தயாரிப்பு பொருளின் சுழற்சி என பொதுவாக வாடிக்கையாளர்களைக் காட்டிலும் அவர்களின் போட்டியாளர்களின் கண்ணோட்டத்தோடு புரிந்துக் கொள்கிறார்கள். அதற்கேற்றவாறு தங்களது செயல்பாடுகளை அமைத்துக் கொள்கிறார்கள். நாங்கள் அவதானித்த வரையில், ஒவ்வொரு வணிகமும், உற்பத்தி கண்ணோட்டத்தில் இருந்து ஒரு படைப்பு மனநிலைக்கு மாற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதைச் செய்ய, நிறுவனங்கள் தங்கள் பாதைகளை வழிநடத்த தெளிவான மற்றும் வலுவான கலாச்சாரம் தேவை.

கொரோனா போன்ற, உலகளாவிய தொற்றுநோயை விட ஒரு சிறந்த வாய்ப்பு வேறு எதுவும் இருக்க முடியாது. ஒரு நிறுவனத்தின் நிலைகுலையாத இருப்பு, அதுவும் கொரோனா பரவல் நேரத்தில் என்பது ஒரு பெரும் பூகம்ப பேரழிவுக்கு பிறகும் நிலைத்திருக்கக் கூடிய கலாச்சாரத்தினை பொறுத்தே இருக்கிறது.

மூன்று அடிப்படை கேள்விகளுக்கான பதில்களில் ஒரு நிறுவனத்தின் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ள முடியும்: 1) நீங்கள் ஏன் இருக்கிறீர்கள்? (Mission – பணி) 2) உங்களின் இருப்பு இந்த உலகில் என்ன வித்தியாசத்தை மேற்கொள்ளவுள்ளது? (Vision – கண்ணோட்டம்) 3) உங்கள் பணியை அடைவதற்கும், உங்கள் கண்ணோட்டத்தை நிறைவேற்றுவதற்கும் நீங்கள் என்ன செய்வீர்கள் அல்லது செய்யமாட்டீர்கள்? (Values – மதிப்புகள்).

கொரோனா பரவும் இந்த சூழலில், பெரும் நிறுவனங்கள் மனிதகுலத்திற்காக உதவும் தங்களது உறுதிப்பாட்டை நிலைநிறுத்தும் கலாச்சாரத்தை இரட்டிப்பாக்கியுள்ளன. அதன்படி, தங்களின் வழக்கமான உற்பத்தி நடவடிக்கைகளில், வேகமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. எடுத்துக்காட்டாக, சொகுசு பிராண்ட் வாசனை திரவிய உற்பத்தியாளரான எல்விஎம்ஹெச் மொயட் ஹென்னெஸி (LVMH Moët Hennessy), தனது உற்பத்திக் கூடத்தில் ஹேன்ட் சானிடைஷர் எனப்படும் கை சுத்திகரிப்பான் திரவங்களை உற்பத்தி செய்கின்றனர். அதேபோல், உலகின் மிகப்பெரிய அழகு சாதன நிறுவனங்களில் ஒன்றான லோரியல் (L’Oreal), கை சுத்திகரிப்பு செய்யும் திரவங்களை உற்பத்தி செய்கின்றனர்.

மேலும், சிறு மற்றும் நடுத்தர வணிக வாடிக்கையாளர்களுக்கான அனைத்து கடன்களையும் முடக்கி, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவும் வகையில்   1 மில்லியன் யூரோக்களை நன்கொடையாக அளித்துள்ளது. மேலும் பெரும் டிஸ்டில்லரி நிறுவனங்கள் தங்கள் வழக்கமான உற்பத்திகளை முடக்கி, கை சுத்திகரிப்பான் திரவங்களை உற்பத்தி செய்வதோடு, பலவும் அதை இலவசமாகக் கொடுக்கின்றன. பல தொலைத் தொடர்பு நிறுவனங்கள் “அமெரிக்காவை இணைத்திடுங்கள் (Keep America Connected)”  உறுதிமொழியில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி அடுத்து வரும் 60 நாட்களுக்கு எந்தவொரு சிறு குடியிருப்பு முதல் வணிகங்களுக்குமான  சேவையை கட்டணம் செலுத்த இயலாமையை கருத்தில் கொள்ளாமல், தாமதக் கட்டண அபராதம் தள்ளுபடி, அனைத்து பொது இடங்களிலும் ஹாட்ஸ்பாட்களை அமைத்தல் மூலம் அனைத்து அமெரிக்கர்களையும் இணைப்பில் வைத்திருக்க உறுதிக் கொண்டுள்ளன.

மைக்ரோசாப்ட், கூகிள், ஜூம் மற்றும் sஇல நிறுவனங்கள் தங்கள் மென்பொருட்களை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்கின்றன. அமேசான் சமீபத்தில் ஒரு மணி நேரத்திற்கான ஊதியத்தை 15 டாலரிலிருந்து 17 டாலர்களாக உயர்த்துவதாகவும், மேலும் 100,000 இடம்பெயர்ந்த உணவகத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முயற்சியில் ஈடுப்பட்டிருப்பதாகவும், அவர்களை மருத்துவ பொருட்கள் விநியோகத்திற்கான வேலைகளுக்கு பயன்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது. மேலும், அவர்களது நிறுவனத்தில், அத்தியாவசியமற்ற பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதி ஆர்டர்களை நிறுத்துவதன் மூலம், அவர்களது கிடங்குகளை, தற்போதைய நிலையை சமாளிக்க உதவும் அத்தியாவசியத் தேவைகளை கையாள பயன்படுத்திக் கொள்ளலாம் என எனவும் அறிவித்துள்ளது. “லாஸ்ட் மைல் ஹெல்த்” சி.இ.ஓ ராஜ் பஞ்சாபி, தற்போது அமெரிக்காவில் உள்ள வேலையற்ற தொழிலாளர்களை, வளரும் நாடுகளில் செய்ததைப் போலவே சமூக சுகாதாரப் பணியாளர்களாக பணியாற்றுவதற்காக பயன்படுத்தக் கொள்ள யோசனை தெரிவித்துள்ளார். பிட்ஸ்பர்க்கில், சட்ட நிறுவனமான “சாஃபின் லுஹானா”வின் நிர்வாக பங்குதாரரான எரிக் சாஃபின், சிறு வணிகங்கள் மற்றும் பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியோடு, பென்சில்வேனியாவில், முன்னறிவிப்பின்றி திடீரென மூடப்பட்ட பள்ளிகளில் இருந்த பள்ளிக் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோகளுக்கு 10,000 சாண்ட்விச்களை தயாரித்து விநியோகிக்கும் ஒருங்கிணைந்த முயற்சியில் ஈடுபட்டார்.  இவ்வாறாக மேலும் பல வணிக நிறுவனங்கள்,  தங்களின் நோக்கத்தினை அடையாளம் கண்டு, நிறைவேற்றவும், தங்களது திறனை அடையாளம் காணவும், விரிவுபடுத்துவதற்கும் பல முயற்சிகளை மேற்கொண்டன.

இந்த எடுத்துக்காட்டுகள் ஒவ்வொன்றும் அனைத்துக்கும் அப்பாற்பட்ட ஒரு தெளிவான நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன. அவர்கள் இந்த நோக்கத்தை கலாச்சாரமாக வைத்து, இந்த நிறுவனங்கள் எந்த நெருக்கடிக்கும் பதிலளிக்கும் திறனை எப்போதும் விரிவுபடுத்துகின்றன. ஏனெனில் அந்த கலாச்சாரங்கள் வலுவானவை. கொரோனா வைரஸ் தொற்றுநோய் உருவாக்கிய தேவைகளுக்கு இந்த நிறுவனங்கள் தனது உற்பத்தி மனநிலையில் பதிலளிக்க முற்படவில்லை. மாறாக, கண்டுபிடிப்பு வழிகளில் பதிலளித்தன. வேகமான செயல்பாடாக, அருகிலுள்ள தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்களை பயன்படுத்துதல், ஆன்லைனில் கற்பிக்க வகுப்பறை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், வீட்டில் இருந்து பணியாற்ற ஊழியர்களை தயார்படுத்துதல், அவர்களது நிபுணத்துவத்தை மேம்படுத்துதல், அத்தியாவசிய பொருட்களின் தேவையை பூர்த்தி செய்ய, தாங்களே அதை உற்பத்தி செய்தல் என அவர்களது கண்ணோட்டம் மாறியுள்ளது. இது வெறுமனே உற்பத்தித் திறனில் கவனம் செலுத்துவதை விட மனிதத் திறனை ஊக்குவிப்பதில் ஒரு புதிய தலைமையின் தேவையை, கட்டாயத்தை நிரூபிப்பதாக உள்ளது.

மறு உருவாக்கம்: வேலை மற்றும் தலைமை பண்பு

கொரோனா வைரஸ் நெருக்கடியின் சவாலை சமாளிக்கும் வகையில், உற்பத்தி முறை மற்றும் திறன்களை வணிகங்கள் மாற்றியமைக்கும் அதே நேரத்தில், அவர்கள் தங்கள் பணியாளர்களின் தேவைகளுக்கும் உரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். COVID-19 இன் “சமூக பரவுவதல்” என்பது அதிக ஆபத்தை தரக் கூடியது சுகாதாரத் துறை அதிகாரிகள் உணர்ந்ததால், வெறும் எச்சரிக்கையாகத் துவங்கிய ஆலோசனைகள், விரைவாக ஒரு அரசு ஆணையாக வளர்ந்தது: வீட்டிலிருந்து வேலை செய்வதன் மூலம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டது. ஒரே இரவில், மாபெரும் கார்ப்பரேட் வளாகங்கள் பேய் நகரங்களைப் போல மாறியது. தொழிலாளர்கள் ஸ்லாக் (Slack), ஜூம் (Zoom), ஸ்கைப் (Skype) மற்றும் ஹேங்கவுட்(Hangout)களைச் பணி சார்ந்த சந்திப்புகளுக்கும், இணைந்து வேலை செய்யவும், பல சந்தர்ப்பங்களில் இந்த நிச்சயமற்ற தன்மையால் ஏற்படுத்தப்பட்ட புரிந்துகொள்ளக்கூடிய மன அழுத்தத்தை வெளிப்படுத்தவும் உபயோகிக்க கற்றுக் கொண்டுள்ளனர். இதனால் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களில், வேலை தடையின்றித் தொடர்கிறது.

“பார்வைக்கு வெளியே” என்பது மனதிற்கு வெளியே இல்லை என்று முதலாளிகள் கற்றுக்கொள்கிறார்கள். குடும்பப் பொறுப்புகள் இன்னும் அதிகமாகிவிட்டாலும் தொழிலாளர்கள் காலக்கெடு மற்றும் பொறுப்புகளைக் கையாளுகிறார்கள். சக ஊழியர்கள் பல சந்தர்ப்பங்களில் இன்னும் அதிகமாகவும் திறமையாகவும் பேசுகிறார்கள். வேறு எந்த மாற்றுகளும் இல்லாமல், மேலாளர்கள் தங்கள் மக்களை சரியானதைச் செய்வார்கள் என்று நம்புகிறார்கள்.

சில நிறுவனங்கள் தங்களது மெய்நிகராக்க (Virtualization) த்தை நோக்கிய நகர்வை மற்றவர்களை விட வேகமாகவும்,  தடையின்றியும் செய்து வருகின்றன.  எடுத்துக்காட்டாக, கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் தனது பல்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்கள் மற்றும் அதன் நேர மண்டலங்களுக்கு ஏற்ப தனது வணிகத்தை நடத்துவதற்கு முறையே Hangouts மற்றும் Team போன்ற கருவிகளை நம்பியுள்ளன. யு.எஸ் மற்றும் ஐரோப்பா இரண்டிலும் தடம் பதித்துள்ள இளம் மென்பொருள் நிறுவனமான “பைப் ட்ரைவ்” 24 மணி நேரத்திற்குள் முற்றிலும் மெய்நிகர் நிறுவனமாக மாற முடிந்தது. மற்றவர்கள் எங்கு, எப்படி தரவுகளை கையாளுவது, பின் அதை செயலாக்குவது,  நம்பகமான அதிவேக அலைவரிசைகளை பணியாளர்கள் கையாளுதல் மற்றும் கலாச்சாரத்திற்கு முன்னுரிமை அளித்தல் போன்ற தடைகளுக்கு இடையில், கட்டாயப்படுத்தும் எதிர்கால கொள்கைகளுடன் போராடுவார்கள்.

இருப்பினும், இன்றைய இந்த கட்டாய சோதனையை  நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இந்த நெருக்கடி குறையும் போது, பல நிறுவனங்கள் அவர்களின் இந்த தூலரமாக்கப்பட்ட பணியாளர் குழுக்களை பயன்படுத்துதல் திறமையானதாகவும், செலவு குறைந்ததாகவும் இருக்கும் என அறிந்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம். வீட்டில் இருந்து வேலை செய்தல் தொடர்ந்து கிடைக்கும்படியான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை முன்னெடுப்பார்கள். இதன் மூலம் உலகம் முழுவது பரவியுள்ள திறமையான பணியாளர்களை அவர்கள் அடைய முடியும். இதனால் நிர்வாகத்தின் பல்வேறு அடுக்குகள்,  மிகவும் விலையுயர்ந்த அலுவலகங்கள் போன்றவை காலப்போக்கில் மறைந்துவிடும், அதே நேரத்தில் இந்த முதலீடுகள் சம்பளமாக மறு ஒதுக்கீடு செய்யப்படலாம் அல்லது அதைப் போன்றதொன்றாகலாம்.

மூன்றாவது தார்மீக சோதனை

இந்த உலகளாவிய தொற்றுநோய், டிஜிட்டல் மாற்றத்தை மட்டுமின்றி, மனித மனமாற்றத்தை நோக்கியும் நம்மை துரிதப்படுத்துகிறது. கடந்த அரை நூற்றாண்டில், நாங்கள் மூன்று தார்மீக சவால்களை எதிர்கொண்டோம்:

பருவநிலை மாற்றம்: முதல் பூமி நாள் 1970 இல் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜூன் மாதத்தில்,  நாசாவின் விண்வெளி ஆய்வுகளுக்கான இயக்குநராக இருந்த டாக்டர் ஜேம்ஸ் ஹேன்சன் செனட் முன் ஒரு அறிக்கையை சமர்பித்தார். அந்த அறிக்கையில் “கிரீன்ஹவுஸ் விளைவு கண்டறியப்பட்டுள்ளது, அது இப்போது நமது காலநிலையை மாற்றி வருகிறது.” என்று கூறப்பட்டிருந்தது. அந்த அறிக்கையின் விளைவுகளை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளே இந்த நூற்றாண்டின் ஐந்து வெப்பமான ஆண்டுகளாக பதிவாகியுள்ளது. மேலும் பூமியின் 10 வெப்பமயமான ஆண்டுகள், கடந்த 15 ஆண்டுகளில் பதிவாகியுள்ளது. முன்னெப்போதும் காணாத வகையில், காட்டுத்தீ, சூப்பர் புயல், வெள்ளம் மற்றும் வறட்சியை நாம் அனுபவித்திருக்கிறோம், ஆனால் மனிதர்களாகிய நாம் செயல்பாடுகளை மாற்ரிக் கொள்ளவில்லை. தேவையான அளவு வேகத்துடன் செயல்பட தவறிவிட்டோம். ஒரு பேரழிவை தாங்கும் அளவுக்கு நம்மை தகவமைத்துக் கொள்ள தவறிவிட்டோம். தற்போதைய கொரோனா பரவலால் மேற்கொள்ளப்பட்டு வரும் உலகளாவிய இடைநிறுத்தம், நம்முடைய வழக்கமான, மனித செயல்பாடுகள் இல்லாமல் பொருளாதாரத்தை சீரமைப்பது என்றும், நமது செயல்பாடுகளை சீரமைத்து மறுதொடக்கம் செய்வது பற்றியும்  பரிசீலனை செய்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.

வருமான சமத்துவமின்மை: 1920 களில் ஏற்பட்ட மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து, அமெரிக்காவில் இன்று இருப்பதை விட, சிறந்த சமமான வருமான சமத்துவத்தைக் கொண்டிருந்தது. ஆனால், இது ஒரு பற்றாக்குறை மிகுந்த ஒரு மன அழுத்தத்துடன் கூடிய நடுத்தர வர்க்கம் என்ற

வகைப்பாடு தோன்ற காரணமாக இருந்தது. பின்னர், 1970 களில் இருந்து, கினி குணகம் (Gini Co – Efficient)  – என்ற புள்ளிவிவர கணக்குப்படி, பொதுமக்களுக்கு இடையேயான வருமான விநியோகம் வியத்தகு முறையில் பணக்காரர்களை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளதை காண முடிந்தது. இந்த புள்ளிவிவரப்படி, Gini Co – Efficient  – 0 எனில், முழுமையான சமத்துவம் மற்றும் Gini Co – Efficient  – 1 எனில் முற்றிலும் சமத்துவமின்மை என்றும் பொருள். ஒரு முதலாளித்துவ சமுதாயத்தில், தோளில் முனைவோர் என்ற அபாயத்தை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் வெகுமதி அளித்தல் என்ற அவர்களுக்கு சாதகமான கோட்பாட்டின்படி, வருமானம் எப்போதும் சமமற்றதாகவே இருக்கும். எவ்வாறாயினும், தற்போதைய  Gini Co – Efficient – .49 (2018) ஆகும். இது 1920 களில் ஏற்பட்ட பொருளாதார சரிவுக்கு முந்தைய சூழலை விட சிறந்ததாகும். இது நமது பொருளாதாரத்தை வலுவாக வைத்திருக்கவும், உருவாக்கிய மதிப்பை நியாயமாக விநியோகிக்கவும், அதிக வருமான விநியோகத்துடன் கூடிய வலுவான நடுத்தர வர்க்கம் உருவாகவும் உதவும் என நம்பப்படுகிறது. “ஹார்வர்ட் எகனாமிஸ்ட் ராஜ் ஷெட்டி”யின் ஆராய்ச்சி அறிக்கை அமெரிக்க கனவின் வீழ்ச்சியைக் ஹெலிவாக எடுத்துக் காட்டுகிறது.

குறிப்பாக “உண்மையான விவரங்களின் அடிப்படையில், 1940-இல் பிறந்த பெரும்பாலான அமெரிக்கர்கள், அதே வயதில் அவர்களின் பெற்றோரை விட அதிகமான வருமானத்தை ஈட்ட முடிந்தது. ஆனால், 1980-இல் பிறந்தவர்களில் பாதி பேர் மட்டுமே பெற்றோரின் குடும்ப வருமானத்தை விட அதிகமாக ஈட்டியுள்ளனர். மேலும் அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது “அமெரிக்காவின் 1% பணக்காரர்கள், அவர்களுக்கு கீழாக உள்ள 90% மக்களின் ஒட்டுமொத்த செல்வத்தை விட அதிகமான செல்வத்தை வைத்திருக்கும்போது, நாம் ​​இந்த சமத்துவமின்மையை நிவர்த்தி செய்ய தவறிவிட்டோம் என்பதற்கான தெளிவான அறிகுறி வேறு எதுவும் இருக்க முடியாது.

கடினமான பாதிப்புக்குள்ளான தொழில்களுக்கு தேவையான அனைத்து மீட்புப் நடவடிக்கைகளும், அனைத்து தொழிலாளர்களுக்கும் மிகவும் வலுவான, தற்காலிக பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதையும் செய்ய வேண்டியது அவசியம். மேலும், இது நமது பொருளாதாரத்தை எவ்வாறு மறுதொடக்கம் செய்ய போகிறோம் என்பதையும் மறுபரிசீலனை செய்வதற்கான அரிய வாய்ப்பையும் நாம் பெற்றுள்ளோம். நாம் நமது பொருளாதாரத்தை மறுஉருவாக்கம் செய்யும் முயற்சியில் முதலீடு செய்யும்போது, பொருளாதாரத்தின் பல்வேறு செயலற்ற பகுதிகளை மறுதொடக்கம் செய்யலாம். இதனால்  ​​நாம் எதிர்பார்த்ததை விட அதிகமானோர் நம்முடன், இரண்டாவது (உற்பத்தி), மூன்றாவது (கணினிமயமாக்கல்) தொழிற்புரட்சியை விட, இந்த நான்காவது தொழில்துறை புரட்சியில் (கணினி (Cyber), உயிரியல் (Biology) மற்றும்  உடல் அமைப்புகளை ஒன்றிணைத்தல் (Physical Systems) அடங்கியது) பங்கேற்க முன் வருவார்கள். வருமான சமத்துவமின்மை என்பது, பொருளாதாரவியலின் கண்ணோட்டத்தில் நியாயத்தின் அளவீடு அல்ல, மாறாக, மனித ஆற்றலை வீணடிப்பது என்பதாகும். இது நம் அனைவரையும் பாதிக்கும். சமீபத்திய ஆராய்ச்சியின்படி, ஒருவர் முதல் 1% வரிசையில் பிறந்திருந்தால், ஒரு கண்டுபிடிப்பை கண்டுபிடித்து காப்புரிமை பெற 10 மடங்கு செலவழிப்பீர்கள். இது பொதுவாக, அதிகப்படியான மதிப்பு உருவாக்கத்திற்கு வழிவகுக்கும். இந்த ஏற்றத்தாழ்வு வெறுமனே நியாயத்தின் அளவீடு அல்ல, மாறாக, இழந்த ஆற்றலின் அளவீடு எனக் கொள்ள வேண்டும். அந்த “இழந்த ஐன்ஸ்டீன்கள்” நமது ஒட்டுமொத்த கூட்டு திறனைக் பெருமளவு பாதிக்கின்றன.

உலகளாவிய தொற்றுநோய்: முதியவர்கள், அடிப்படை உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள், நமது சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு முறைமையே மிகவும் தீவிரமாகவும், அதிக விகிதாசார அளவிலும் பாதிக்கும் உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில் நாம் இப்போது இருக்கிறோம். ஆனால், நாம் தேசிய அளவில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பதில் நடவடிக்கைகள், நமது உண்மையான, துல்லியமான  தேவைக்கு வெகுதூரத்தில் இருக்கிறது. மேலும், நமது பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு மத்தியில், மிகவும் பாதிக்கப்படக்கூடிய, பாதிப்பு அடைந்துள்ளவர்களுக்கும்,  நமது சுகாதார கட்டமைப்புக்கும் அமைப்புக்கும் முன்னுரிமை அளிக்க முடிவெடுத்துள்ளோம். மேலும் குறைந்த அளவிலான இழப்புகளை ஈடுசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நமது பராமரிப்பு அமைப்பில் உள்ள சிக்கல்களை  தீர்க்கவும் முயற்சிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய இந்த தார்மீக சோதனையை கண்டிப்பாக வெற்றி கொள்வோம். “பவுலிங் அலோன்: தி கொலாப்ஸ் அண்ட் ரிவைவல் ஆஃப் அமெரிக்கன் கம்யூனிட்டி”யின் ஆசிரியர் ராபர்ட் புட்னம் “1964 ஆம் ஆண்டிற்கு முந்தைய ஆவணங்களே “நாங்கள்” என்பதை விட “நான்” என்பது முன்னுரிமை பெற்றதற்கு காரணம்” என்று கூறிய அந்த போக்கை மாற்றியமைக்க இது ஒரு தருணம் ஆகும். இந்த தருணத்தை பயன்படுத்தி ஒரு சமூக மூலதனத்தை மீண்டும் கட்டமைப்போம்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் இந்த நேரத்தில்,  நிறுவனங்கள் தங்கள் வேலை மற்றும் பணி சூழலின்  எதிர்காலத்தை நோக்கி விரைவாக மாறி வருவதால், அவர்கள் கலாச்சாரத்தையும் நோக்கத்தையும் தங்களது வடக்கு நட்சத்திரமாகவும், எதிர்காலத்திற்கான ஹேண்ட்ரெயிலாகவும் ஏற்றுக்கொள்வதைக் காண்கிறோம். கலாச்சாரத்தின் மீது கவனம் செலுத்துவது, வீட்டில் இருந்து பணி புரிதலை பெரிய அளவில்  செயல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவது, விரைவான கற்றல் மூலம் உற்பத்தி திறன்களையும், செயல்முறைகளையும் முன்னிலைப்படுத்தி அன்றைய மாறிவரும் தேவைகளை கோரிக்கைகளை பூர்த்தி செய்ய உறபத்தி திறனை மேம்படுத்துவது என பெரும் நம்பிக்கையளிக்கும் செயல்களை இந்த நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. நம் அரசியல் தலைவர்களுக்கும், இந்த உலகளாவிய தொற்றுநோயால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வாக  நம்பிக்கை மட்டுமே  இருப்பதால், மக்களிடையே பாதுகாப்பை உளவியல் ரீதியாக நிலை நிறுத்த வேறு வாய்ப்புகளும் இல்லை.

மேலும், நமது வாழ்நாளிலேயே முதன்முறையாக, மனிதர்களுக்கும், மனித உணர்வுகளுக்கும், மனித புத்தி கூர்மைக்கும் ஆதரவளிக்கிறோம். இது சிறு வணிகங்களிடையே பிரதிபலிப்பதையும் காண்கிறோம். தங்களுடைய பொருளாதார பாதிப்புகளுக்கு இடையே, சார்ந்துள்ள சமூகத்தின் பாதுகாப்பிற்காக, கடைகளை மூடுவதையும் எப்போதும் இலாபத்தை முன்னறிவிக்கும் மாபெரும் நிறுவனங்களும், நாடு மற்றும் சமூகத்திற்கு ஆதரவாளிக்கும் விதமாக தங்களின்  கணிசமான வளங்களைத் திரட்டி சமூகத்திற்கும், நாட்டின் நலனுக்கும் உதவுவதையும் கண்கூடாக காண்கிறோம். இந்த அச்சம் கொள்ளவைக்கும் நேரத்தில் நாம் வரிசைப்படுத்தி செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் பல இருக்கின்றன. ஆயினும்கூட, இது மனிதர்களுக்கான, எதிர்காலத்திற்கான நம்பமுடியாததொரு, நம்பிக்கையான தருணம். இப்போது நாம் உருவாக்கும் கட்டமைப்புகள்,  எடுக்கும் தார்மீக முடிவுகள், வேலை மற்றும் மனிதகுலத்தின் எதிர்காலத்தில் மனிதர்களுக்கும் முக்கிய பங்கு இருக்கும் என்பதற்கான, ஒரு நம்பிக்கையான அறிகுறியாகும். நமக்கு முன்னால் ஒரு பெரிய நிச்சயமற்ற தன்மை காத்துக் கொண்டுள்ளது. அதை எதிர்கொள்ள ஒரு வழியும் இருக்கிறது: அது நாம் “இணைந்திருப்போம்!”

Reasons to Be Optimistic: Improving The Human Condition

HEATHER E MCGOWAN

ஆசிரியரின் குறிப்பு: இந்த நம்பிக்கையான குறிப்பை நான் உங்களிடம் விட்டுச் செல்கிறேன். நமது வாழ்நாளில், ஆவணப்படுத்தப்பட்ட வரலாறுகள்  அனைத்திலும் மனித குலத்தை மேம்படுத்துவதில் மிகப் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளோம். மக்களை தீவிர வறுமையிலிருந்து உயர்த்தியுள்ளோம். பெருமளவில் விரிவுபடுத்த்தப்பட்ட கல்வியறிவு, இணைய பயன்பாட்டிற்கு பின், வெகுகுறுகிய காலத்தில் உலகில் பாதிக்கும் மேற்பட்டவற்றை இணைத்துள்ளோம். இந்த பார்வையில், முன்னேற்றத்தில் தான் நாம் நம்பிக்கையைக் காண்கிறோம். இப்போதும் நாம் உலகளாவிய இணைப்பில் இருப்பது பற்றி மிகவும் நன்றியுடன் இருக்கிறோம்).

 

மூலக்கட்டுரை: ஹீதர் இ. மெக்கோவன்

தமிழில்: லயா