கொரோனா பாதிப்பை பேரிடராக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

டெல்லி:

ந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பாதிப்பை பேரிடராக மத்திய அரசு அறிவித்து உள்ளது.  மாநில அரசுகள் பேரிடராக கருதி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 2 ஆகி உள்ளது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் நோக்கில், பேரிடராக கருதி மாநில அரசுகள் நடவடிக்ககை மேற்கொள்ள வேண்டும் என மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  கொரோனா வைரஸ் (கொவைட்-19) பாதிப்பை ஒவ்வொரு மாநிலமும் பேரிடராகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில பேரிடர் நிதியில் (எஸ்.டி.ஆர்.எஃப்) இருந்து கொரோனா பாதிப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளது.

மேலும்,  கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்குவது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவச் செலவுகளை மாநில அரசுகள் நிர்ணயிக்கும்.

தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் மாநிலப் பேரிடர் நிதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில்  கூறப்பட்டு உள்ளது.