பிரியாணி கிடைக்காத விரக்தி.. வெறிபிடித்த’ கொரோனா நோயாளி..

.

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர், கொரோனா தொற்று பாதிப்பால், அங்குள்ள ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில்  தனி வார்டில் வைக்கப்பட்டிருந்தார்,

அவர் பிரியாணி பிரியர்.

இளைஞரின் மனைவி நேற்று கணவனுக்காக வீட்டில் சிக்கன் பிரியாணி சமைத்து, மருத்துவமனைக்கு எடுத்து வந்தார்.

‘’வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுக்கு அனுமதி இல்லை’’ என டாக்டர்கள் கூறி விட்டனர்.

இதனால் அந்த இளைஞர் மன நோயாளி போல் நடந்து கொள்ள ஆரம்பித்தார்.

கூச்சல் போட்டார்.

அங்கிருந்த தீ அணைப்பானை உருவி எடுத்து ,வார்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து  நொறுக்கி ரகளையில் ஈடுபட்டார்.

இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரியாணி கிடைக்காத விரக்தியில் கொரோனா நோயாளி செய்த கலாட்டாவால் அந்த மருத்துவமனையில் பெரும் பரபரப்பு உருவானது.

மருத்துவர்களும் செவிலியர்களும் உயிரைக்கொடுத்து நோயாளிகளைக் காப்பாற்றிவரும் நிலையில், அற்பம் பிரியாணிக்காக ஒரு இளைஞர் இப்படி நடந்துகொண்டது அங்கிருப்பவர்களை முகம் சுளிக்கவைத்துள்ளது.

– ஏழுமலை வெங்கடேசன்