கொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை..

கொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை..
ஆந்திர மாநிலம் எலுரு பகுதியைச் சேர்ந்த ரங்காராவ் என்பவர், காய்ச்சல் காரணமாக அங்குள்ள கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், சிறப்பு வார்டில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் ரங்காராவ், நேற்று மருத்துவமனையின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இவரையும் சேர்த்து ஆந்திர மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 40 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
‘’கொரோனாவால் பாதிக்கப்படுவோர், சொந்த உறவினர்களால் ஒதுக்கப்படுவதால் மனநிலை பாதிக்கப்பட்டு .தற்கொலை முடிவை மேற்கொள்கின்றனர்’’ என டாக்டர்கள் தெரிவித்தனர்.
‘’ வீட்டில் இருப்போரை விட மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளே அதிக அளவில் தற்கொலை செய்கிறார்கள்’’ என்றும் டாக்டர்கள் கூறினர்.
-பா.பாரதி.