விழுப்புரத்தில் இருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு

செங்கல்பட்டு

கொரோனா பாதிப்பு உறுதியாகித் தப்பி ஓடிய டில்லி வாலிபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்

டில்லியை சேர்ந்த ஒரு வாலிபருக்கு கொரோனா தொற்று உள்ளது  உறுதி ஆனது.

அந்த வாலிபர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இருந்து திடீரென தப்பி ஓடினார்.

அவர் புகைப்படத்தை அரசு வெளியிட்டது.

அதையொட்டி ஊடகங்கள் அவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

தற்போது அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு ஷெட்டில் தூங்கிக் கொண்டு இருந்த போது பிடிபட்டுள்ளார்.