கேரள மாநிலம் பாறசாலை அருகேயுள்ள முள்ளுவிளை என்ற இடத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்துதல் மையம் உள்ளது.


அரசியல் கட்சி ஒன்றின் இளைஞர் அமைப்பை சேர்ந்த ஷாலி என்பவர் , கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதே மையத்தில் பெண் ஒருவரும் சேர்க்கப்பட்டிருந்தார்.

அந்த பெண் குளிக்க செல்லும் முன்பாக, குளியல் அறையின் வெண்டிலேட்டரில், தனது செல்போனை வைத்து விட்டு வந்துள்ளார், ஷாலி.
குளிக்கச்சென்ற அந்த பெண், வெண்டிலேட்டரில் வைக்கப்பட்ட செல்போன் படம் பிடித்த நிலையில் இருப்பதை பார்த்து அலறியுள்ளார்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்திய போது, இளைஞர் ஷாலியின் திருவிளையாடல்கள் தெரியவந்தன.

அன்றைய தினம் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட இருந்த ஷாலி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், வீட்டில் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தி, அவரை அனுப்பி விட்டனர்.
அரசியல் காரணங்களால் ஷாலியை போலீசார் கைது செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

-பா.பாரதி.