சென்னை அருகே கொரோனா வார்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட கொரோனா நோயாளி!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை அடுத்த  கேளம்பாக்கத்தை சேர்ந்த ரங்கன் என்பவர் உடல்நலப் பாதிப்பு காரணமாக, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியானது. இதனால்,   அங்குள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவில் யாரும் கவனிக்காத நேரத்தில் , வார்டிவ்ல உள்ள  ஜன்னல் ஒன்றில் ரங்கன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.