தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 7000க்கும் குறைவு

சென்னை

மிழகத்தில் இன்று 682 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,26,943 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,971 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 60,024 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,45,78,202 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 682 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி மாநிலங்களில் இருந்து 2 பேர் வந்துள்ளனர்.   இதுவரை  8,26,943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 6 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,228 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 869 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 8,07,744 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 6,971 பேர் சிகிச்சையில் உள்ளனர்.