சென்னை

மிழகத்தில் இன்று 3,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 9,11,110 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 27,743 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 79,927 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,98,45,778 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 3,986  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிநாட்டில் இருந்து ஒருவர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து 13 பேர் வந்துள்ளனர்.  இதுவரை  9,11,110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 17 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 12,821 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,824  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 8,70,546  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 27,743 பேர் சிகிச்சையில் உள்ளனர்.