புதுச்சேரியில் கர்ப்பிணி உள்பட மேலும் 16 பேருக்கு கொரோனா உறுதி…

புதுச்சேரி:

புதுச்சேரியில் கர்ப்பிணி உள்பட 16 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. மாநிலத்தில் ஏற்கனவே 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று  இன்று 8 மாத கர்ப்பிணி உள்பட புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பி 287 ஆக உயர்நதுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர்  மல்லாடி கிருஷ்ணா ராவ், மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்ட  116 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 148 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது புதிதாக காரைக்காலைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி உள்பட 16 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேருக்கு தொற்று எப்படி பரவியது என்பது தெரியவில்லை. மற்றவர்கள் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள், கர்ப்பிணி சென்னை சென்று திரும்பியவர் ஆவார். இதனிடையே 2 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் தற்போது புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 287 ஆகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 162 ஆகவும் உயர்ந்துள்ளது என்று கூறினார்.