தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான எம்எல்ஏக்கள் 9 ஆக உயர்வு…

சென்னை:

மிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது.  இதுவரை பாதிக்கப் பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவின் கோர ஆட்டத்துக்கு பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சமீப நாட்களாக எம்எல்ஏக்களும் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், தொடர்ந்து அதிமுக, அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகதில் 4 திமுக எம்.எல்.ஏக்களுக்கும், 4 அதிமுக எம்.எல்.ஏக்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில்,  நேற்று  கோவை மாவட்ட தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

கார்ட்டூன் கேலரி