சென்னையில்தொடர்ந்து 20வது நாளாக 1000-ஐ கடந்த பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை:
சென்னையில்தொடர்ந்து 20வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்து தொடர்ந்து வருகிறது. இது சென்னைவாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.  சென்னை மட்டுமில்லாத வேறு சில மாவட்டங்களிலும் தொற்று தீவிரமடைந்து வருகிறது.
தமிகத்தில், இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 64,603 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக, சென்னையில் இன்று ஒரே நாளில் 1,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 44,205 ஆக அதிகரித்து உள்ளது. தற்போதைய நிலையில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து 24,670 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 18,889 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் பலி எண்ணிக்கை  645  ஆக அதிகரித்து. உள்ளது.
மாவட்டம் வாரியாக விவரம்:

சென்னை – 1,380, திருவள்ளூர் – 156, செங்கல்பட்டு – 146, மதுரை – 137, திருவண்ணாமலை – 114, காஞ்சிபுரம் – 59, தேனி – 48, திண்டுக்கல் – 44, கள்ளக்குறிச்சி – 43, திருச்சி – 41, தூத்துக்குடி – 38, வேலூர் – 36, கடலூர் – 29, ராணிப்பேட்டை – 29, விருதுநகர் – 26, ராமநாதபுரம் – 22, சிவகங்கை – 20, நீலகிரி – 17, தஞ்சை – 14, கோவை – 12, பெரம்பலூர் – 12, தென்காசி – 11, திருவாரூர் – 10, தருமபுரி – 11 பேரும், விழுப்புரம் – 9,
கன்னியாகுமரி – 9, சேலம் – 7, ஈரோடு – 5, கரூர் – 3, கிருஷ்ணகிரி – 3, நாகப்பட்டினம் – 2, புதுக்கோட்டை – 12, திருப்பத்தூர் – 1, நாமக்கல் ஒருவரும் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.