மதுரை-270, செங்கல்பட்டு-291 உள்பட மாவட்டங்களில் உச்சமடையும் கொரோனா தொற்று….

சென்னை:

மிழகத்தில் சென்னையில் மட்டுமே கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டங்களிலும் தொற்று பரவல் உச்சமடைந்து வருகிறது.

மதுரையில் இன்று ஒரே நாளில் 270 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 291 பேர் உள்பட தேனி, திருவண்ணாமலை  உள்பட பல மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும்  291 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,098-ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை 96 பேர் உயிரிழந்த நிலையில்,  சிகிச்சை பெறுவோர் – 2,696 ஆகவும், குணமடைந்தோர்-3,014 பேராகவும் உள்ளனர்.

மதுரை மாவட்டம்

மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,403 ஆக உயர்ந்துள்ளது.  மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை  887 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,203 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

தேனி மாவட்டம்

தேனியில் இன்று ஒரே நாளில் 65 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 866 ஆக உயர்வு. அங்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 191 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலையில் 606 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவண்ணாமலை  மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 5குழந்தைகள் 48 பெண்கள் உட்பட 151 பேருக்கு கொரோனா நோய்தொற்று உறுதியாகி உள்ளது. இதனால்  பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,182 ஆக உயர்ந்தது.  
இதுவரை 910 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமாகி உள்ளனர். 1108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11 பேர் பலியாகி உள்ளனர்.

 

கார்ட்டூன் கேலரி