சென்னையில் கொரோனா பாதிப்பு 64,689 ஆக உயர்வு…ஆயிரத்தை நெருங்கிய உயிரிழப்பு…

சென்னை:

மிழகத்தில் இன்று 4,329  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்தபாதிப்பு  1,02,721 ஆக உயர்ந்துள்ளது.  இன்று ஒரே நாளில் கொரோனாவால் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,385 ஆக அதிகரித்துள்ளது.  இன்று 2,357  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.. இதனால்  குணமடைந்த வர்களின் எண்ணிக்கை 56, 021 ல் இருந்து 58,378 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக  சென்னையில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது.  இன்று ஒரே நாளில் 2,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 64,689 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இதுவரை 40,111 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 23,581 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் , சென்னையில் ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 996 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்ததுள்ளது.

 

கார்ட்டூன் கேலரி