கடந்த 24 மணி நேரத்தில் வேலூர், தேனி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..

சென்னை:

மிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில்,  கடந்த 24 மணி நேரத்தில் வேலூரில்  280 பேருக்கும், தேனி மாவட்டத்தில் புதிதாக 50 பேருக்கும் தொற்று உறுதி செய்யப் பட்டு உள்ளது.

வேலுர் மாவட்டம்

வேலூா் மாவட்டத்தில் இன்று மிக அதிகபட்சமாக 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 3466-ஆக உயா்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோா் அனைவரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனையில் சோக்கப்பட்டனா்.

கொரோனா பாதித்த நபருடன்  தொடா்பில் இருந்தவா்களும் தனிமைப்படுத்தப்பட்டு, உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தேனி மாவட்டம்

தேனி மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,966 ஆக அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டம் கூடலூரில் இன்று முதல் இந்த மாத 27 ஆம் தேதி வரை கொரோனொவை கட்டுப்படுத்தும் விதமாக முழுகடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.