இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,67,324 ஆக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,67,324 ஆக உயர்ந்துள்ளதாகவும், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை . 58,390 ஆக இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 60,975 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும்,  848 இறப்புகளையும் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

இதனால் நாட்டில்,  கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 31,67,324 ஆக உயர்ந்துள்ளன. இறப்பு எண்ணிக்கை 58,390 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை  24,04,585 ஆக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.