சென்னை:
மிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சென்னையில் தொற்று பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் மாவட்டங்களில் பரவல் தீவிரமாகி வருகிறது.
இன்று 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை  1,22,350 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 3,051 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  74,167 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 46,480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால், தமிழகத்தில் இன்று  64 பேர் உயிரிழந்த நிலையில்  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 21 பேரும், அரசு மருத்துவமனையில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்ச உயிரிழப்பாக  தலைநகர் சென்னையில் 1,117 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 136 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 105 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 63 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 98 பரிசோதனை மையங்கள் உள்ளன. இதில் 52 அரசு, 46 தனியார் ஆகும்.
இன்று மட்டும் 34,962 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 13,87,322 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,292 பேர் ஆண்கள், 1,464 பேர் பெண்கள்.
கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 74,842 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 47,486 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 22 ஆகவும் உள்ளது.
தற்போது 46,480 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 6,063 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1,01,452 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 14 ஆயிரத்து 835 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.