கார் ஓட்டுநருக்கு கொரோனா… நடுவழியில் இறக்கி விடப்பட்ட அமைச்சர்…

வேலூர்:

மிழக அறநிலையத்துறைஅமைச்சரின் கார் ஓட்டுநருக்கு கொரோனா தொற்று உறுதியானது குறித்த தகவல் வந்ததால், நடுவழியிலேயே அமைச்சர் காரை விட்டு  இறங்கி வேறு கார் மூலம் வீடு வந்து சேர்ந்தார்.

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்ராமச்சந்திரன் இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

கார் ஆரணி அருகே சென்றுகொண்டிருந்தபோது, கார் டிரைவருக்கு கொரோனா சோதனைமுடிவு மொபைல் மூலம் தெரிய வந்தது. அதில், டிரைவருக்கு கொரோனா பாசிட்டிவ் என தகவல் வந்ததால், உடனே டிரைவர் காரை நிறுத்தி, அமைச்சரிடம் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, அமைச்சர் வேறு கார் மூலம் வீட்டுக்கு சென்றார். அமைச்சர் நடுவழியிலேயே இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.