முன்னாள் அதிமுக அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை:

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து,  அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி,   தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 1510 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனாவில் இருந்து  இதுவரை 62,778 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், தமிழக அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்கள் 9 பேர் ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில்,   தமிழக முன்னாள் அமைச்சரும் அதிமுக இலக்கிய அணி செயலாளருமான பா. வளர்மதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கார்ட்டூன் கேலரி