சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா…

சென்னை:

சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை பாதிக்கப் பட்டோர் மொத்த எண்ணிக்கை 2லட்சத்து 20ஆயிரத்து 716 ஆக உயர்ந்துள்ளது.  சென்னை யில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 95,857 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, தமிழகத்தில் கோயம்புத்தூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவதாக சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.