ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை இதயநோய் மருத்துவருக்கு கொரோனா…

சென்னை:

சென்னை சென்டிரல் அருகே அரசு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின்  இதயநோய் பிரிவு மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா நோயாளிகள் அனைவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டுகளில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  அவர்களுக்கு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் இருதய நோய் பிரிவில் பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, இதய நோய் சிகிச்சை பிரிவில் பணிபுரியும்  அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதய நோய் பிரிவு மூடப்பட்டு உள்ளது.

இந்த தகவல், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.